யோசேப்பின் வாழ்வில் என்ன நடந்தது?

 யோசேப்பின் வாழ்வில் என்ன நடந்தது?


  கர்த்தர் யோசேப்பின் சூழ்நிலையைப் பார்த்து  அவனை உயர்த்தினாரா? அல்லது அந்த சூழ்நிலைகளில், யோசேப்பின் இருதயத்தைப் பார்த்து அவனை உயர்த்தினாரா??.

அவருடைய வாழ்க்கையில்  நடந்தவைகள், நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்விலும் நடக்கிறது. சில

சமயங்களில் யோசேப்பின் வாழ்க்கையை படிக்கும்போது..ஒரு நாள் இவரைப்போல ஆண்டவர் நம்மையும் உயர்த்துவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.  அவ்வாறு நினைத்தது.. நடக்காதபோது சோர்ந்துபோகிறோம்.


  சொல்லப்போனால், யோசேப்பின் வாழ்க்கையில் அவன் சந்தித்த பகையையோ.. கஷ்டத்தையோ.. புறக்கணிப்பையோ.. அவமானத்தையோ.. அடிமை வாழ்க்கையையோ ...  பார்த்து கர்த்தர் அவனை உயர்த்தவில்லை. அந்த சூழ்நிலைகளில் தன்னோடு வாழ்ந்த மனிதர்களுடன்; தன்னையும், தனக்குள் இருந்த தேவனையும் எப்படி  வெளிப்படுத்தினார்? என்பதாலே அவனை கர்த்தர் உயர்த்தினார்.

"யோசேப்புக்கு என்ன நடந்தது?" என்பது அல்ல.. அவை நடக்கும் பொழுது, அவருடைய "இருதயம் எப்படிப்பட்டதாக இருந்தது?" என்பதே, கர்த்தரின் கிருபை வெளிப்பட காரணமாக இருந்தது. 


  யோசேப்புக்கு, எல்லாம் எதிர்மறையாக நடந்தபோது.. அவன் அவனாக இருந்து எல்லாவற்றையும் மேற்கொண்டான்.


◾எல்லோரையும் அவன் நேசித்தான். 

LOVING HEART


சகோதரர்கள் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்.. பகைத்தார்கள்..

கடிந்து கொண்டார்கள்.. 

அலட்சியம் செய்தார்கள்..  கொலைசெய்ய முயற்சித்தார்கள்..

ஆனால், யோசேப்பு சூழ்நிலைக்கு எதிராக சகோதரர்களை எதிர்த்து செயல்படாமல் நேர்மறையாக எல்லோருடனும் சமாதானத்தைக் காத்துக்கொண்டான்.


◾அனைவரையும் மன்னித்தான்.

      FORGIVING HEART


  செய்யாத தவறுக்கு, தன்னை சிறைக்கு அனுப்பிய போத்திபார் மனைவி.. உதவியை பெற்றுக்கொண்டு, மறந்து போன பானபாத்திரக்காரன்..  எகிப்தில்  தன்னை விற்று போட்ட சகோதர்கள்.. என தன்னிடம் வந்த எவரையும் தண்டிக்காமல், மன்னித்து ஏற்றுக் கொண்டார்.


◾ தேவனுக்கும், மனிதனுக்கும் நன்றி உள்ளவனாய் இருந்தான்.

THANKFUL HEART


போர்த்திபார் மனைவியோடு தவறாக வாழ வாய்ப்பு கிடைத்தபோது, தன் தேவனுக்கும்.. எஜமானுக்கும்  அவன் நன்றி உள்ளவனாய் இருந்து, அதைத் தவிர்த்தான். 


  ◾ சமாதானமாய் இருந்தான்.

PEACEFUL HEART


  யோசேப்பு எல்லா சூழ்நிலையிலும், எல்லோருடனும் சமாதானமாய் இருந்தான். சிறையில் இருந்த போதும்..  இராஜரீக நிலையில் உயர்த்தப்பட்ட போதிலும், தன் குடும்பத்திற்கும்.. தான் வாழ்ந்த தேசத்திற்கும் அவன் சமாதானம் பண்ணுகிறவனாய் இருந்தான்.


  நீங்கள், உங்களுடைய வாழ்க்கையில்  கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியாதபடி.. முற்றிலும் அழிக்கப்படவேண்டும்,

என்பதுதான் பிசாசின் திட்டம் என்றாலும், நீங்கள் உங்களுடைய தேவ அடையாளத்தில், (God given Identity) இருதயத்தை பாதுகாத்து வாழும்போது அடைய வேண்டிய வெற்றியின் உயரத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


   நீங்கள் ஒதுக்கப்படலாம்.. தூக்கி எறியப்படலாம்.. கொலை செய்யும் அளவிற்கு வெறுக்கப்படலாம்.. அனைத்து உரிமைகளும் பறிக்கப்படலாம்.. செய்த நன்மைகள் மறக்கப்படலாம்.ஆனால்,

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். (நீதிமொழிகள் 4:23) என்ற வசனத்தின் படி, சூழ்நிலைகளினால் உங்களுடைய இருதயம் பாதிக்கப்படாதபடி காத்துக் கொள்வதே வாழ்வின் தரிசனம் நிறைவேற முக்கியமானது ஆகும்.  எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறவர்களின் வாழ்வில் பூரண ஆசீர்வாதம், பரிபூரணமாய் வெளிப்படும். அதற்கு, அவரது கிருபை உங்களோடிருப்பதாக !

Post a Comment

0 Comments